உலக சினிமா அரங்கில் தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் தலை நிமிர வைத்த பெருமை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையே சாரும். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்  சமீபத்தில் “கோப்ரா” படத்திற்காக இசையமைத்த “தும்பி துள்ளல்” பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. அது மட்டும் இன்றி அவர் இசை அமைத்து இருந்த பாலிவுட் படமான தில் பேச்சாரா என்ற படத்தின் பாடல்களும் அதிகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

என்ன தான் புகழின் உச்சத்தில் இருந்தாலும் தனது குடும்பத்தை பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். சமீபத்தில் கூட ஏ.ஆர்.ரகுமானின் மகளான கதிஜா எங்கு சென்றாலும் புர்கா அணிந்து செல்வது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதற்கு தானே விருப்பப்பட்டு தான் புர்கா அணிவதாகவும், இதனால் தனக்கு மகிழ்ச்சியும், பெருமையுமே கிடைப்பதாகவும் பதிலளித்திருந்தார். அதன் பின்னர் அந்த சர்ச்சையில் அடங்கியதே. 

 

இதையும் படிங்க: கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை விவகாரம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை மிகவும் பாதித்தது. சுஷாந்தின் கடைசி படமான “தில் பேச்சாரா” படத்தின் இசையமைப்பாளராக மட்டுமல்லாது, திரைத்துறையில் ஒரு நல்ல கலைஞனை இழந்ததற்காக வருத்தப்பட்டார் ஏ.ஆர்.ரகுமான். இந்நிலையில் சுஷாந்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது மகள் கீ-போர்டு வாசிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: “என் புருஷனை ஏன் வச்சிட்டு இருக்க”... வனிதாவை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்த பீட்டர் பால் முதல் மனைவி.....!

“தில் பேச்சாரா” டைட்டில் பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமானின் மகள் ரஹிமா கீபோர் வாசிக்கும் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பாவைப் போலவே இசையின் மீது தீராத தாகம் கொண்ட ரஹிமாவின் இந்த வீடியோவை ரசிகர்கள் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதோ...