கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 40 வயதில் வனிதா 3வது திருமணம் செய்து கொண்டதும், பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீட்டர் பால் சமாச்சாரம் வெளியே வராத வரை வனிதாவின் திருமணத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மனைவி மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு வந்ததாக பால் மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு வனிதா மீதான எதிர்ப்பு அலைகளை அதிகரித்துள்ளது. 

 

வனிதா - பீட்டர் பாலை திருமணம் செய்தது குறித்து சூர்யா தேவி என்பவர் தரக்குறைவாக விமர்சித்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதையடுத்து நேற்று வனிதா துணை கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். மேலும் தன்னை பற்றி தரக்குறைவாக விமர்சித்த தயாரிப்பாளர் ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் வனிதா. 

 

இதையும் படிங்க: கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

இதையடுத்து எலிசபெத் ஹெலன் தனது தரப்பு நியாயங்கள் குறித்து அளித்துள்ள பேட்டி வெளியாகியுள்ளது. அதில், “முதலில் திருமணம் என அறிவித்த வனிதா, எதிர்ப்பு அதிகமானதும் வெறும் நிச்சயதார்த்தம் தான், லவ் எக்ஸ்சேஞ்ச் தான் என மாறி, மாறி ஏன் பேச வேண்டும்?. என் பங்க்‌ஷன் வீடியோவை ஒரு மில்லியன் பேர் பார்த்திருக்காங்க அதை அதிகமானோர் எதிர்க்கவில்லை என வனிதா சொல்கிறார். ஏனென்றால் நீ ஒரு சாக்கடை என அனைவரும் தெரியும், அதனால் தான் உன் மேல் கல்லை போட்டு, நாங்கள் அசிங்கப்பட தயாராக இல்லை என அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்” என சகட்டு மேனிக்கு ஆவேசமாக பேசியுள்ளார். 

“நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனது பதிலாக வனிதா வீட்டிற்கு போய் பீட்டர் பாலை இழுத்துக்கிட்டு வந்திருக்கனும். வனிதா வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர் என்ன சொல்கிறாரோ, அதை தான் பீட்டர் பால் செய்கிறார். விஷயம் இவ்வளவு வெளியே தெரிஞ்ச பிறகும் ஏன் பீட்டர் பால் மக்களிடம் பேசவில்லை. எந்த பிரச்சனையும் கோர்ட்டில் தான் பார்ப்பேன் என பீட்டர் பால் கூறியுள்ளதாக சொல்கிறார்கள். 7 வருசத்துக்கு முன்னாடி நான் ஓடிப்போய்ட்டேன் என அபாண்டமாக வனிதா பேசுவதை தடுக்க கூட பீட்டர் பாலுக்கு தைரியம் இல்லை”. 

 

இதையும் படிங்க:  “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

“போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க கூட ஏன் பீட்டர் பாலை அழைத்து வரவில்லை. ஏன் புருஷனை உன் வீட்டில் வச்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு. தரதரன்னு அடிச்சிட்டு இழுத்துக்கிட்டு வரவா?, அதுக்கும் நான் ரெடி. உனக்கு தைரியம் இருந்தால் உண்மை என்ன என்பதை ஓபனாக ஒத்துக்கொள்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.