தனுஷின் திருச்சிற்றம்பலம் திரையிடப்பட்ட தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் உற்சாகத்தால் திரையரங்குகள் அல்லோலப்படுவது வழக்கமாகி விட்டது

Fans smashed the theater where Dhanush Thiruchitrambalam was screened

தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் தான் திரையரங்குகளில் வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரின் படம் திரைக்கு வருவதால் தனுஷின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் காத்திருந்தனர்.  தனுஷின் முந்தைய படங்களான ஜகமே தந்திரம் முதல் தி கிரே மேன் வரை அனைத்தும் ஓடிடியில் தான் வெளியானது. அதோடு தமிழில் இவர் இறுதியாக நடித்த மாறன் படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.

இந்த நிலையில் தான் திருச்சிற்றம்பலம் திரைக்கு வந்தது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் உற்சாகத்தால் திரையரங்குகள் அல்லோலப்படுவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தனுஷ் படம் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வருவதால் ஓவர் குதூகலத்தில் இருக்கும் ரசிகர்கள் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கை அடுத்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் இந்தியன் போட்டோ சூட்... உடல் முழுவதும் தோட்டாக்களுடன் மிரட்டும் கமல்

பழமையான திரையரங்குகளில் ஒன்றான ஆல்பர்ட் திரையரங்கில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று  திருச்சிற்றம்பலம் படத்திற்கான பிற்பகல் 12 மணி காட்சிக்கு டிக்கெட் விநியோகிக்கப்பட்ட நிலையில் படம் திரையிட தாமதம் ஆகியுள்ளது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 12 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Fans smashed the theater where Dhanush Thiruchitrambalam was screened

 இந்த செய்தியை கேட்டு ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கம் முகப்பு கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  இது தொடர்பாக நிர்வாகிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை அடுத்து ரசிகர்களிடம் பணம் திரட்டி உடைக்கப்பட்ட கண்ணாடியை மாற்ற உறுதியளித்தனர். அதேபோல திரையரங்கு நிர்வாகிகள் ரத்து செய்யப்பட்ட காட்சிக்கு வசூலிக்கப்பட்ட டிக்கெட் பணத்தை திருப்பி அளித்தனர்.  இந்த சம்பவத்தால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...தம்பிக்கு வில்லனாகும் செல்வராகவன்? நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட் இதோ!

Fans smashed the theater where Dhanush Thiruchitrambalam was screened

மேலும் செய்திகளுக்கு...'உங்களை ஏன் நீக்க கூடாது'.. கே பாக்யராஜுக்கு நோட்டிஸ் விட்ட நடிகர் சங்கம்

திருச்சிற்றம்பலம் படத்தில் ராசி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர், நாயகனின் தாத்தாவாக பாரதிராஜாவும், தந்தையாக பிரகாஷ்ராஜும் தோன்றியுள்ளார் யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர்இயக்கியிருந்தார். கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios