தெலுங்கு திரை உலகில் பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று மிகச் சிறப்பாக நடித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் சுனில். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த புகழ்பெற்றவர் இவர். 

தனது இளம் வயது முதலே சினிமா ஆசையோடு தெலுங்கு திரையுலகில் கால் பதிக்க தினமும் போராடி அதில் வெற்றி கண்டு சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "நுவே காவாலி" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகர் சுனில். 

அன்று தொடங்கி இன்றுவரை நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லன் என்று பல்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தோடு வளம் வரும் ஒரு மிகப்பெரிய நடிகர் அவர். கடந்த 23 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சுனில், தான் திரையுலகில் அறிமுகமாகி சுமார் 23 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த 2023ம் ஆண்டில் தான் முதல் முதலில் தமிழ்த்திரை உலகில் காண்பதுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சந்தானத்திற்கு அருகில் அழகு தேவதை சுரபி.. பிரஸ் மீட்டுக்கு மத்தியில் நடந்த மரக்கன்று நடும் விழா - Viral Pics!

சில வாரங்களுக்கு முன்பு வெளியான சிவகார்த்திகேயனின் "மாவீரன்" திரைப்படம் தான் இவர் நேரடியாக தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஜெய்லர், மார்க் ஆண்டனி, ஈகை கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக இவர் நடித்து வருகிறார். 

Scroll to load tweet…

குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சுனில், தற்பொழுது ராகவா லாரன்ஸ் அவர்களுடைய உடன் பிறந்த தம்பி எல்வின் நாயகனாக நடிக்கும் "புல்லட்" என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை புல்லட் பட குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

இமயமலை பயணம்.. வியாசர் குகைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் - காத்திருந்து அன்பு மழை பொழிந்த ரசிகர்கள்! Viral Video!