இமயமலை பயணம்.. வியாசர் குகைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் - காத்திருந்து அன்பு மழை பொழிந்த ரசிகர்கள்! Viral Video!
சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில நாட்கள் ஓய்வெடுக்க அவர் இமயமலை சென்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இமயமலை சென்று திரும்பியதும் தனது 17 வது திரைப்படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்கான டெஸ்ட் சூட் முடிந்துள்ள நிலையில், டிஜி ஞானவேல் இயக்கும் அந்த திரைப்படத்திலும் ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தை முடித்த பிறகு தனது 171வது திரைப்படமாக, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்தடுத்து இந்த இரண்டு படங்களையும் அவர் நடிக்கவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக சில காலம் ஓய்வெடுக்க அவர் ஏற்கனவே மாலத்தீவுகள் சென்று வந்த நிலையில் தற்பொழுது சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தனது இமயமலை பயணத்தை தனது நண்பர்களுடன் நேற்று தொடங்கினார்.
மயிலை மறக்க முடியுமா... வியக்க வைக்கும் நடிகை ஸ்ரீதேவியின் ஹிட் லிஸ்ட் ஒரு பார்வை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முதற்கட்டமாக ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி சமாதியை சென்று வணங்கி, தனது பயணத்தை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்து வருகிறார்.
அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்று அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள வியாசர் குகைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்றுள்ளார்.
அவ்வளவு உயரமான மலையிலும் கூட அவருடைய ரசிகர்கள் அவருக்காக காத்திருந்து அவரோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இன்னும் சில நாட்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலையில் தங்கியிருந்து ஓய்வெடுத்து, அதன் பிறகு மீண்டும் தனது திரைப்பட பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"மாணவர் பருவத்தில் மாறும் மனநிலை".. நாங்குநேரியில் நடந்த கொடூர சம்பவம் - சரத்குமார் வேதனை!