- Home
- Cinema
- சந்தானத்திற்கு அருகில் அழகு தேவதை சுரபி.. பிரஸ் மீட்டுக்கு மத்தியில் நடந்த மரக்கன்று நடும் விழா - Viral Pics!
சந்தானத்திற்கு அருகில் அழகு தேவதை சுரபி.. பிரஸ் மீட்டுக்கு மத்தியில் நடந்த மரக்கன்று நடும் விழா - Viral Pics!
அறிமுக இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், ஆபிரகாம் இசையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ்.

இந்த திரைப்படத்தை பார்த்த சந்தானத்தின் ரசிகர்கள், ஒரு காலத்தில் கலாய் மன்னனாக திகழ்ந்த அதே சந்தானத்தை மீண்டும் பார்க்க முடிந்தது என்று கூறியுள்ளனர்.
இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் நடிகை சுரபி, நகைச்சுவை நடிகர் ரிடின் கின்ஸ்லே, மூத்த நடிகர் மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராம், தீபா, முனீஸ் காந்த் மற்றும் பிரபல சண்டை பயிற்சியாளர் பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் Bhootala Bangla என்ற பெயரில் வெளியானது. தற்பொழுது தெலுங்கு திரையுலக ரசிகர்களுக்காக, அங்கு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் மற்றும் கதையின் நாயகி சுரபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் பொழுது அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய நடிகர் சந்தானம், கிரீன் இந்தியா சேலஞ்ச் வழங்கும் மரக்கன்று நடும் சவாலை ஏற்றுக் கொண்டு, மரக்கன்று நட்டு அந்த இயக்கத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.