MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • லோகேஷ் இயக்கத்தில் தனி படமாகிறது ரோலெக்ஸ்... Fans Meet-ல் தன் அடுத்த 5 பட அப்டேட்டுகளை கொடுத்த சூர்யா

லோகேஷ் இயக்கத்தில் தனி படமாகிறது ரோலெக்ஸ்... Fans Meet-ல் தன் அடுத்த 5 பட அப்டேட்டுகளை கொடுத்த சூர்யா

ரசிகர்களுடன் சந்திப்பு மேற்கொண்ட நடிகர் சூர்யா, அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளை கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 13 2023, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அண்மையில் ரசிகர்களுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார் சூர்யா. அந்த சந்திப்பின் போது தனது நடிப்பில் உருவாக உள்ள அடுத்த 5 படங்களின் அப்டேட்டுகளை அவர் கூறி இருக்கிறார். அதன் விவரத்தை பார்க்கலாம்.

26

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக இது தயாராகி வருகிறது. இப்படம் குறித்து பேசுகையில், தாங்கள் ஷூட்டிங்கிற்கு முன் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

36

சூர்யா 43

தனது 43-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என சூர்யா கூறி இருக்கிறார். தற்காலிகமாக சூர்யா 43 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

இதையும் படியுங்கள்... அடுத்த தனுஷ் ரெடி... குடும்பத்தில் இருந்து புது ஹீரோவை களமிறக்கும் அசுரன் - சைலண்டாக நடக்கும் வேலைகள்

46

வாடிவாசல்

சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கும் ஒரு படம் என்றால் அது வாடிவாசல் தான். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதிலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய சூர்யா, வெற்றிமாறன் விடுதலை 2-ம் பாகத்தின் ஷுட்டிங்கை முடித்த பின்னர் வாடிவாசல் தொடங்கும் என கூறி உள்ளார்.

56

ரோலெக்ஸ்

விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலெக்ஸ் என்கிற கேமியோ கதாபாத்திரம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. அந்த கதாபாத்திரத்தை வைத்து தனி படம் எடுக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதுகுறித்த அப்டேட்டையும் சூர்யா கொடுத்துள்ளார். அதன்படி ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனி படம் ஒன்று உருவாக உள்ளதாகவும், இதற்காக லோகேஷ் சொன்ன கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறி இருக்கிறார்.

66

இரும்புக்கை மாயாவி

ரோலேக்ஸ் படத்தை எடுத்து முடித்த பின்னர் இரும்புக்கை மாயாவி படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் சந்திப்பில் சூர்யா கூறி இருக்கிறார். இப்படி தான் நடிக்க உள்ள அடுத்த 5 பட அப்டேட்டுகளை நடிகர் சூர்யா ஒரே நேரத்தில் கூறியதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஜெயிலர் படம் பார்க்க வந்தபோது சுற்றிவளைத்த ரசிகர்கள்... கண்கலங்கிய ஷிவாண்ணா - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Recommended image2
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Recommended image3
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved