செல்பி எடுக்க விடாததால் ஆத்திரம்... பிரபல பாடகர் மீது எம்.எல்.ஏ. மகன் தாக்குதல் நடத்திய ஷாக்கிங் வீடியோ இதோ

பிரபல பின்னணி பாடகர் சோனு நிகம் மீது சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வின் மகன் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Famous singer Sonu Nigam attacked by shiv sena MLA son in mumbai

பாலிவுட் திரையுலகில் முன்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சோனு நிகம். தனித்துவமான குரல்வளம் கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளனர். இவர் தமிழில் ஏ.ஆர்.ரகுமான், ஜிவி பிரகாஷ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல்வேறு சூப்பர்ஹிட் பாடல்களை பாடி உள்ளார். குறிப்பாக ஜீன்ஸ் படத்தில் இடம்பெறும் வாராயோ தோழி, மதராசபட்டினம் படத்தில் வரும், ஆருயிரே, கிரீடம் படத்தில் இடம்பெறும் விழியில் உன் விழியில் போன்ற பாடல்களையும் சோனு நிகம் தான் பாடி இருந்தார்.

இப்படி பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி மக்கள் மனதை வென்ற சோனு நிகம், அடிக்கடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருக்கிறார் சோனு நிகம். இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு அவரது சூப்பர்ஹிட் பாடல்களை கேட்டு மகிழ்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் பதர்பேகர் என்பவரின் மகனும் கலந்துகொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... என்ன மனுஷன்யா..! புது வீட்டில் குடியேறியதும் ரசிகர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த தனுஷ் - போட்டோஸ் இதோ

Famous singer Sonu Nigam attacked by shiv sena MLA son in mumbai

அவர் அவசர அவசரமாக வந்து சோனு நிகம் உடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சோனு நிகமின் பாதுகாவலர்கள் அவரைத் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் மகன் சோனு நிகம் மேடையில் இருந்து கீழே இறங்கும் போது அவரது பாதுகாவலரை கீழே தள்ளிவிட்டதோடு, சோனு நிகமையும் தள்ளிவிட முயன்றுள்ளார். இதில் சோனு நிகம் எந்தவிதமான காயம் இன்றி தப்பித்தாலும், அவரது பாதுகாவலருக்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து செம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோனு நிகமின் பாதுகாவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் மகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... வீட்டில் கிளி வளர்த்தது குத்தமா? ரோபோ சங்கருக்கு லட்சக்கணக்கில் ஃபைன் போட்டு தீட்டிய வனத்துறை - பின்னணி என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios