MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன மனுஷன்யா..! புது வீட்டில் குடியேறியதும் ரசிகர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த தனுஷ் - போட்டோஸ் இதோ

என்ன மனுஷன்யா..! புது வீட்டில் குடியேறியதும் ரசிகர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த தனுஷ் - போட்டோஸ் இதோ

நடிகர் தனுஷ், போயஸ் கார்டனில் கட்டியுள்ள புது வீட்டில் குடியேறியதும் தனது ரசிகர்களை அவர்களது குடும்பத்தினருடன் வர வைத்து, அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 20 2023, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் தனுஷ் ரசிகர்கள் மீது தீராத அன்பு வைத்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்ததும் நெகிழ்ந்து போன தனுஷ், உங்களுக்காக நான் என்ன செய்யப்போகிறேனோ என மேடையில் எமோஷனலாக பேசி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

அதுமட்டுமின்றி அந்த விழா முடிந்ததும், தன்னுடைய ரசிகர் மன்ற தலைவர்களை அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் செய்து வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து கேட்டறிந்த தனுஷ், தானும் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்து இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர்களை தனது வீட்டுக்கே அழைத்து விருந்து வைத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... வசூல் வேட்டையாடும் வாத்தி... மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா..! தனுஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

35

நடிகர் தனுஷ் சென்னையின் ரிச் ஏரியா என சொல்லப்படும் போயஸ் கார்டனில் புதிதாக பிரம்மாண்ட பங்களா ஒன்றை கட்டி உள்ளார். இந்த ஏரியாவில் ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, இயக்குனர் அட்லீ ஆகியோர் சொந்தமாக வீடு வைத்திருக்கும் நிலையில், நடிகர் தனுஷும் தற்போது அந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த அந்த வீட்டின் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து கிரஹபிரவேசம் நடத்தி அந்த வீட்டில் குடியேறி உள்ளார் தனுஷ்.
 

45

அந்த புது வீட்டில் குடியேறியதும் நடிகர் தனுஷ், தனது ரசிகர்களை அவர்களது குடும்பத்தினருடன் வர வைத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு, தடபுடலாக விருந்தும் வைத்துள்ளார். இறுதியாக அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார் தனுஷ். அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வரும் ரசிகர்கள், இப்படிப்பட்ட ஒரு நடிகருக்கு ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.

55

இதையும் படியுங்கள்... ரஜினி வீடருகே.. போயஸ் கார்டனில் பிரம்மாண்ட மாளிகை கட்டி பெற்றோருக்கு பரிசாக வழங்கிய தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trisha : காதல் எப்போதும்... விஜய் முதல்வர் ஆன பின் த்ரிஷா போட்ட சூசக பதிவு - வைரலாக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
Karuppu முதல் Exam வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் செம மாஸாக ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved