வசூல் வேட்டையாடும் வாத்தி... மூன்றே நாளில் இத்தனை கோடி கலெக்ஷனா..! தனுஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ
நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் வாத்தி. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்திருந்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகி உள்ளது. தெலுங்கில் இப்படம் சார் என்கிற பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் சித்தாரா நிறுவனம் தயாரித்து உள்ளது.
கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்திருக்கிறார். இப்படத்தில் தனுஷ் உடன் சமுத்திரக்கனி, கென் கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. அதேபோல் வாத்தி திரைப்படம் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினி வீடருகே.. போயஸ் கார்டனில் பிரம்மாண்ட மாளிகை கட்டி பெற்றோருக்கு பரிசாக வழங்கிய தனுஷ் - வைரலாகும் போட்டோஸ்
அதன்படி வாத்தி திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.43 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த அசுரன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் மட்டுமே ரூ.100 கோடி வசூல் என்கிற மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளன. அந்த பட்டியலில் வாத்தியும் இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். படத்தின் ரிலீசுக்கு முன்பே அப்படத்தின் பாடல்கள் வேறலெவலில் ஹிட் அடித்தன. குறிப்பாக ஸ்வேதா மோகன் பாடிய வா வாத்தி பாடல் வைரல் ஹிட் ஆனது. படத்தின் ரிலீசுக்கு பின் வாத்தி பட பின்னணி இசைக்கும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. படத்திற்கு பின்னணி இசை பலம் சேர்த்து இருப்பதாகவும் விமர்சகர்கள் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் - உருகிய ரசிகர்கள்!