- Home
- Cinema
- வீட்டில் கிளி வளர்த்தது குத்தமா? ரோபோ சங்கருக்கு லட்சக்கணக்கில் ஃபைன் போட்டு தீட்டிய வனத்துறை - பின்னணி என்ன?
வீட்டில் கிளி வளர்த்தது குத்தமா? ரோபோ சங்கருக்கு லட்சக்கணக்கில் ஃபைன் போட்டு தீட்டிய வனத்துறை - பின்னணி என்ன?
நடிகர் ரோபோ சங்கரின் வீட்டில் சட்டவிரோதமாக வெளிநாட்டு கிளிகளை வளர்த்து வருவதை அறிந்த வனத்துறையினர் அதனை பறிமுதல் செய்ததோடு அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு அவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு கிளிகளை வளர்த்து வருவதாக அறிந்த வனத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை மேற்கொண்டு அந்த கிளிகளை பறிமுதல் செய்தனர். அந்த சமயத்தில் ரோபோ சங்கரும், அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்ததால், அவர்கள் இந்தியா திரும்பியதும் விசாரணை நடத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி அண்மையில் சென்னை திரும்பிய ரோபோ சங்கரிடம், இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இது போன்ற வெளிநாட்டு கிளிகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோதமானது என தனக்கு தெரியாது என ரோபோ சங்கர் கூறி இருக்கிறார். இருந்தாலும் சட்டப்படி அதற்கு அனுமதி இல்லை என்பதனால் ரோபோ சங்கருக்கு வனத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதுவும் ரூ.2.5 லட்சம் ரூபாயாம்.
இதையும் படியுங்கள்... ரோபோ சங்கரை வனத்துறையிடம் வசமாக சிக்க வைத்த ஹோம் டூர் வீடியோ... வீட்டில் வளர்த்த 2 கிளிகள் பறிமுதல்
இதை அறிந்த நெட்டிசன்கள் வீட்டில் கிளி வளர்த்தது குத்தமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த இரண்டு கிளிகளும் அவர்கள் காசு கொடுத்து வாங்கிய கிளிகள் இல்லையாம். அது அவர்களுக்கு பரிசாக வந்த கிளிகளாம். பரிசாக வந்த கிளிகளுக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தது ரொம்ப ஓவர் என ரோபோ சங்கர் குடும்பத்தினர் புலம்பி வருகிறார்களாம். அதுமட்டுமின்றி அந்த கிளிகள் ரோபோ சங்கர் குடும்பத்திடம் மிகவும் பாசமாக பழகுமாம்.
ரோபோ சங்கரின் மகள் பிகில் படத்தில் நடித்தபோது அந்த கிளிகள் தங்களது வீட்டுக்கு வந்ததால், அதற்கு பிகில், ஏஞ்சல் என பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், ரோபோ சங்கர் குடும்பத்தினர் தனியார் யூடியூப் சேனலுக்காக கொடுத்த ஹோம் டூர் வீடியோ மூலம் தான் இந்த வகை கிளிகள் அவரது வீட்டில் இருப்பது வனத்துறைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து தான் அவர்கள் அந்த கிளிகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் கிளிகள் தற்போது கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அது வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... எக்கச்சக்கமா வெயிட் போட்டு... ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அனுஷ்கா! லேட்டஸ்ட் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!