கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரபல முன்னணி இசையமைப்பாளர், மரணமடைந்துள்ள சம்பவம், திரையுலகத்தினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில், சல்மான் கான் நடித்த திரைப்படங்களான 'வாண்டட்', 'தபாங்'  மற்றும் 'ஏக் தா டைகர்' போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு, இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்பட்டவர் வாஜித் கான்.

42 வயதாகும் இவர் சிறுநீரக நோய்த்தொற்று காரணமாக  மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், கடந்த வாரம் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்: இப்போது கும்முனு இருக்கும் லாஸ்லியா 4 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தார் தெரியுமா? ஷாக்கிங் போட்டோஸ்...
 

இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மருத்துவ அறிக்கைகள் தகவல் வெளியாகியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வாஜித் கானின் சகோதரரும் இசையமைப்பாளருமான சலீம் மெர்ச்சண்ட் கான் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து கூறுகையில், பாடகர்-இசையமைப்பாளர் வாஜித் கான் சில நாட்களுக்கு முன்பு செம்பூர்ஸ் சூரனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது.

மேலும் செய்திகள்: உடலை இறுக்கி பிடித்திருக்கும் டைட் உடையில்... கவர்ச்சி அட்டகாசம் செய்யும் யாஷிகா!
 

"அவருக்கு பல சிக்கல்கள் இருந்தது. குறிப்பாக சிறுநீரக பிரச்சினை இருந்ததாக முதலில் மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த நான்கு நாட்களாக  வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த இவரது நிலைமை மேலும் மோசமடையத் தொடங்கியதாக சலீம் தெரிவித்துள்ளார்."

இதைத்தொடர்ந்து, இவரது மருத்துவ பரிசோதனையில், COVID 19   தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, இசையமைப்பாளர் வாஜித் கானுக்கு சிறுநீரக தொற்றுடன், கொரோனா வைரஸ் பாதிப்பும் இவருடைய மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: ஒரு நாளைக்கு 48 முறையா? சந்தானம் பற்றி ஷாக்கிங் தகவலை வெளியிட்ட இயக்குனர்!
 

இவரின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய, இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.