உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவராக விளையாடியவர் இலங்கை பெண்ணான லாஸ்லியா.  இவருக்கு நிகழ்ச்சி ஆரம்பமான போதே, முதல் முதலில் இவருக்கு தான் தமிழ் ரசிகர்கள் ஆர்மி துவங்கி கொண்டாடினர்.  இவர் வெற்றி பெரும் அணைத்து வாய்ப்புகளும் இருந்தும், ஒரு சில காரணத்தால் கடைசி 20 நாட்களில், மக்கள் மனதில் சிறு வெறுப்பு தட்டியதால் வெற்றிபெறும் வாய்ப்பு இவரது கையை விட்டு நழுவியது.

எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் வரை வந்து வெளியேறினார். இவர் வெளியேறியதில் இருந்து லாஸ்லியாவின் ரசிகர்கள், எப்போது அவரை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்கப்போகிறோம் என்று காத்திருக்கின்றனர்.  தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தை மகிழ்ச்சியாக்கும் வகையில்,  நடிகர் ஆரியுடன் ஒரு படத்திலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: அரை நிர்வாண யோகா... காதலனுடன் கவர்ச்சியாக ஆசனங்கள் செய்து அலம்பல் பண்ணும் இளம் நடிகை... ஹாட் கிளிக்ஸ்!
 

இவ்வளவு ஏன் பிரபல நாளிதழில்,  மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட போது கூட லாஸ்லியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தன்னுடைய சொந்த ஊரான இலங்கையில் குடும்பத்துடன் மிகவும்  மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வருகிறார் லாஸ்லியா.

மேலும் செய்திகள்: சர்ச்சை ஏற்படுத்திய 'காட்மேன்' வெப் சீரிஸுக்கு எதிராக பிரபல நடிகர் போலீசில் பரபரப்பு புகார்!
 

இப்போது பார்ப்பதற்கு, குண்டாக கும்முனு இருக்கும் லாஸ்லியா, கடந்த நான்கு வருடங்களுக்கு முன், அதாவது 2015 மற்றும் 2016 ஆண்டுகளில், மிகவும் ஒல்லியாக இருக்கும் புகைப்பகங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...