பிரபல தமிழ் பட இயக்குனர் பாலா அவருடைய இயக்கத்தில், பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் வணங்கான். தற்பொழுது இந்த திரைப்படத்தில் நடிகராகவும், ஒரு சிறந்த இயக்குனராகவும் திகழும் ஒருவர் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா மற்றும் பாலா இணைப்பில் உருவாக துவங்கிய திரைப்படம் தான் வணங்கான். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி சூர்யா அவர்களே இந்த திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தன்னுடைய 41வது திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாகும் என்றும், தன்னுடைய 2D நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிடும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் இந்த வணங்கான் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது, எழும் கீர்த்தி செட்டி படத்தின் நாயகியாக களமிறங்க இருந்தார். 

இரண்டு பாகங்களாக உருவாகும் லியோ? பக்காவாக பிளான் போட்ட லோகேஷ் தீயாக பரவி வரும் தகவல்..!

ஆனால் இந்த சூழ்நிலையில் தான் சூர்யா மற்றும் பாலா இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியானது. சென்ற ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்த படத்தை சூர்யா கைவிட்டு நிலையில் மீண்டும் அதே மார்ச் மாதம் இந்த 2023ம் ஆண்டில் சூர்யாவுக்கு பதிலாக அந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் வெளியானது. 

அதேபோல கீர்த்தி செட்டி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் ரோஷினி பிரகாஷ் நடிப்பார் என்றும் அறிவிப்புகள் வெளியானது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக இந்த படத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகரும், பிரபல இயக்குனருமான மிஸ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. 

பாலா இயக்கத்தில் மிஸ்கின் டிப்பது இது முதல் முறை என்பதால், இருவருடைய ரசிகர்களும் இதை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். 

மெகா வெற்றிக்கு தயாராகும் தலைவர்..! 'ஜெயிலர்' படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டும் இத்தனை கோடியா?