மெகா வெற்றிக்கு தயாராகும் தலைவர்..! 'ஜெயிலர்' படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
'ஜெயிலர்' படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த தகவல், தற்போது வெளியாகி ஒட்டு மொத்த திரை உலகினரையும் வாயடைக்க செய்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து, மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இந்து திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி அதாவது இன்னும் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
ரஜினிகாந்தின் மகனாக வசந்த் ரவியும், மருமகளாக மிர்னாவும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் டிடிவி கணேஷ், விநாயகர், மோகன் லால், ஜாக்கி ஷெரிப், சிவராஜ் குமார், தமன்னா போன்ற பலர் நடித்துள்ளனர்.
இரண்டு பாகங்களாக உருவாகும் லியோ? பக்காவாக பிளான் போட்ட லோகேஷ் தீயாக பரவி வரும் தகவல்..!
சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சி அதிகாலை 9 மணிக்கு தான் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல ரசிகர்கள் பெங்களூரு மற்றும் ஆந்திராவில் திரையிடப்படும் காட்சியை காண அண்டை மாநிலங்களில் ப்ரீ புக்கிங் செய்துள்ளனர்.
மேலும் இந்த முறை ஜெயிலர் திரைப்படம், வழக்கத்தை விட அண்டை மாநிலங்களில் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பல ரசிகர்கள் 'ஜெயிலர்' படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் ப்ரீ புக்கிங் டிக்கெட் மட்டும் 5.5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகினரையும் வாய்யடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!