இரண்டு பாகங்களாக உருவாகும் லியோ? பக்காவாக பிளான் போட்ட லோகேஷ் தீயாக பரவி வரும் தகவல்..!
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தற்போது புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர், நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், யோகி பாபு, கதிர், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
மேலும் சமீபத்தில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நான் ரெடி பாடல் வெளியான நிலையில், இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும்.. பாடல் முழுவதும் தம், சரக்கு, போன்ற வார்த்தைகள் நிரம்பி வழிவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாக புகார் மனுக்களும் அளிக்கப்பட்டது.
அதேபோல் தளபதி விஜய் வருங்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி அக்கறை இன்றி, அவர்களுக்கு போதைப் பழக்கத்தை தூண்டும் விதத்தில் இது போன்ற பாடல்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படம் குறித்த அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி வரும் நிலையில், தற்போது 'லியோ' படம் இரண்டு பாகங்களாக உருவாவதாக புதிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வட்டமிட்டு வருகிறது.
எதிர்நீச்சல் தொடரை காலி பண்ண சதி திட்டம்..?பலே பிளான் போட்டும் புஸ்ஸுன்னு போகிடுச்சாம்..!
அதன்படி முதல் பாகத்தில் இரண்டாவது பாகத்திற்கான லீடுடன் லியோ திரைப்படம் நிறைவடையும் என்றும், லியோ இரண்டாம் பாகத்தை... கைதி இரண்டாம் பாகத்தின் கதையுடன் இணைத்து உருவாக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் பாகம் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. லியோ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டாலும், ஒரு சில காட்சிகளை எடுக்க லோகேஷ் கனகராஜ் மீண்டும் காஷ்மீருக்கு சென்றுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.