இர்ஃபான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட் என பிரபலங்களின் அடுத்தடுத்த மறைவால் பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் புகழ் பெற்ற நடன இயக்குநரான சரோஜ் கான் (71) உடல் நலக்குறைவால் மரணமடைந்தது பாலிவுட்டை அதிர்ச்சியைச் செய்துள்ளது. இந்தியில் மறக்க முடியாத பாடல்களான ஏக் தோ தீன், ஹவா ஹவா தம்மா தம்மா போன்ற புகழ் பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராக விளங்கியவர் சரோஜ்கான். 

 

இதையும் படிங்க: கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க!

மூன்று முறை தேசிய விருது வென்ற சரோஜ் கான் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திடீர் முச்சுத்திணறல் காரணமாக மும்பை பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சரோஜ் கான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து அவருடைய மூச்சு திணறல் பிரச்சனைக்கு மட்டுமே சிகிச்சை அளித்துள்ளனர். 

 

இதையும் படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா நாக்பால், இந்துவாக இருந்த இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினார். 13 வயதிலேயே 41 வயதான சோஹன் லால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரிடம் முறையாக நடனம் கற்றுக்கொண்ட சரோஜ் கான், பின்னர் படங்களில் நடன இயக்குநராக பணியாற்ற தொடங்கினார். இந்த தம்பதிக்கு ராஜு கான் என்ற மகனும்,  சுகையான கான் என்ற மகளும் உள்ளனர்.

சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இவரின் நினைவஞ்சலிக் கூட்டம் 3 நாட்களுக்குப் பின் நடைபெறும் என்று அவருடைய மகள் சுகைனா கான் தெரிவித்துள்ளார். மாதுரி தீட்சித், மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு ஆஸ்தான நடன இயக்குநராக பணியாற்றிய சரோஜ் கானின் மரணம் பாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.