மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன்.. KH 234ல் இணைந்த பிரபல நடிகையின் மகள் - அவர் போட்ட இன்ஸ்டா பதிவு வைரல்!
நாயகன்.. தமிழ் திரை உலகம் என்பதை தாண்டி இந்திய திரை உலகத்திலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படம் அது என்றால் அது மிகையல்ல. வெளியாகி சுமார் 36 ஆண்டுகள் கடந்து விட்டபொழுதும் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படும் திரைப்படமாக உள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் நாயகன். இந்நிலையில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய உள்ளனர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் இந்த திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் 234 வது திரைப்படம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்பொழுது இந்தியன் 2 படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன், அடுத்தபடியாக கல்கி 2829 AD திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன், அதன் பிறகு மணிரத்தினம் அவர்கள் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ள நிலையில் இந்திய சினிமாவில் மிகவும் ஒரு எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறி இருக்கிறது கமலஹாசனின் 234 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் இணையுள்ள கலைஞர்கள் குறித்த தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பிரபல நடிகை குஷ்பு அவர்கள் ஒரு முக்கியமான பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது மகள் அவந்திகா உலக நாயகன் மற்றும் மணிரத்தினம் என்கின்ற இரு மாபெரும் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது எனக்கும், எங்களது குடும்பத்திற்கும், எனது கணவருக்கும் மிகப்பெரிய கௌரவத்தை அளித்துள்ளது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குஷ்புவின் மூத்த மகளான அவன்திகா நடிப்பு சம்பந்தமாக வெளிநாடுகளுக்கு சென்று பயின்று வந்தவர் ஆவார். மணிரத்னம் இயக்கும் இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது, இது அவருடைய முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.