சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியுடன், டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு. 

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில், மிக பிரமாண்ட படைப்பாக உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், நடிகை பார்வதி விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், காட்டு வாசி பெண்ணாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படம், கன்னடத்தில் உருவாகி, வசூலில் மிரட்டிய KGF படத்தின் கதைக்களம் போன்றே, தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைத்து, நடித்துள்ளார் விக்ரம். மேலும் இப்படத்தின் ஸ்டாண்ட் காட்சியில் நடித்த போது, விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் விலா எலும்பு முறிந்து சில மாத ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இப்படத்தில் நடித்தார்.

ஆஸ்கர் விருது, உட்பட பல விருதுகளை குறிவைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள், பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்பட்டது. இதனை இயக்குனர் பாரஞ்சித்தும் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் உறுதி செய்தார்.

தங்கலான் படத்தில் ரிலீஸ் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், சற்று முன்னர், 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதியுடன்... டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி தங்கலான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த தகவல் விக்ரம் ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளது.

Scroll to load tweet…