நேற்று முதலே பாலிவுட்டில் அடுத்தடுத்து அதிர்ச்சியான மற்றும் சோகமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பாலிவுட்டின் பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனுக்கும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களான ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா, ஜெயா பச்சன் உள்ளிட்டோருக்கு முதலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. 

 

ஆனால் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுபோதாது என்று தற்போது பாலிவுட் நடிகர் ஒருவரின் மரணம் ரசிகர்களையும், பிரபலங்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. 

 

இதையும் படிங்க: அமிதாப் பச்சன் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யாவிற்கும் தொற்று உறுதி

இதற்கு முன்னதாக பாலிவுட்டில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட் உருவாக்கிச் சென்ற சோக சுவடுகளே மறையாத நிலையில், ஐஸ்வர்யா ராயுடன் நடித்த 36 வயது நடிகர் ஒருவர் திடீரென மரணமடைந்த செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

2016ம் ஆண்டு வெளியான சராப்ஜித் என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் முக்கிய வேடத்தில் நடித்தவர் ரஞ்சன் ஷேகல். பல பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கானுடன் ஜீரோ படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ரஞ்சன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இதனால் வீட்டில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சனின் உடல் நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சன் மரணமடைந்தார். ரஞ்சன் ஷேகல் மரணத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.