லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "மாஸ்டர்". இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனால் இருதரப்பு ரசிகர்களும் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

 

இதையும் படிங்க: “உன் ஆபாச வீடியோ என் கையில்”... இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய தொழிலதிபர்....!

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் "மாஸ்டர்" திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் "மாஸ்டர்" திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் கொரோனா பிரச்சனை விடாப்பிடியாக பரவி வருவதால், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க:  “அப்பாவுக்கும் - புருஷனுக்கும் வித்தியாசமிருக்கு”... வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

அவ்வப்போது இந்த படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா,  '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும் ', சாந்தனு, தீனா, சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், பிரேம் குமார், கைதி வில்லன் அர்ஜுன் தாஸ் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். 

 

இதையும் படிங்க:  ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

இந்நிலையில் இந்த படத்தில் தன்னுடைய அப்பா நடிகராக அறிமுகமாக உள்ளதாக பெரிய ட்விஸ்டை ஓபன் செய்துள்ளார் இளம் நடிகரான கதிர். இந்த படத்தின் கதிரின் தந்தையான லோகு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இதை உறுதிபடுத்தியுள்ள கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  இந்த இருவரின் பயணமும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. அவர்களது ஆர்வமும் கனவும் தான் இன்று நான் நானாக இருப்பதற்கு காரணம். அவர்கள் தான் என் அப்பா, அம்மா.53 ஆண்டுகளுக்குப் பிறகு எனது அப்பா மாஸ்டர் மூலம் நடிப்பதற்கான கனவு நனவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.