சினிமாத்துறையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வேலைக்கு செல்லும் பல பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால் கண்ணாடி கனவுகளின் இடமான சினிமா உலகில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது. அப்படி தான் ஹாலிவுட்டில் சின்னதாக ஆரம்பித்த மீ டூ புகார், தற்போது கோலிவுட் வரை கொளுந்துவிட்டு எரிகிறது. பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகைகள் மட்டுமல்லாது, துணை நடிகைகள், மேக்கப் வுமன், பெண் துணை இயக்குநர்கள் என பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #Metoo ஹேஷ்டேக் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினர். 

 

இதையும் படிங்க: கவர்ச்சி கன்னி இஷா குப்தாவின் அடுத்த அதிரடி... இதுவரை யாருமே செய்யாத காரியத்தை துணிச்சலா செஞ்சிருக்காங்க!

இப்படி சினிமாத்துறையில் வெடித்த புகார்கள் ஒன்று, இரண்டல்ல பல ஆயிரம். அந்த குற்றச்சாட்டுக்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பது தான் அவலத்தின் உச்சம். அப்படி தெலுங்கு, கன்னட சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மீது கொடுத்துள்ள பகீர் புகார் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: “அப்பாவுக்கும் - புருஷனுக்கும் வித்தியாசமிருக்கு”... வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!

மோஹித் என்பவர் தன்னை ஒரு பெரிய நிறுவனத்தின் சி.இ.ஓ. என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக தன்னை நியமிக்க உள்ளதாக அணுகியதாகவும் தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாள் பார்ட்டியில் அதை அறிவிக்க உள்ளதாக இளம் நடிகையை அங்கு அழைத்துள்ளார். அங்கு இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனக்கூறி நடிகையிடம் இருந்து இதுவரை 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இந்த புகார் குறித்து பெங்களூரு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.