பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் ராம்பால். மெஹர் ஜெசியா என்பவருடன் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இவருக்கு மஹிகா, மஹிரா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். இதனையடுத்து இவர் வெளிநாட்டு நடிகையான கேப்ரியலாவை காதலித்து வந்தார். இருவரும் ஊர் ஊராக சுற்றி திரிந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது கேப்ரியா கர்ப்பமாகி இருப்பதாக அர்ஜுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேப்ரியா கார்த்தியோடு தோழா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"குல்ஃபி நடிகையிடமிருந்து எஸ்கேஎப் ஆன விஜய்"

தமிழ் சினிமாவில் அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான லைலா. திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதனையடுத்து இவர் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக களமிறங்கியுள்ளார். படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது சூர்யாவுடன் நடித்து வெளியான மெகா ஹிட் படமான உன்னை நினைத்து என்ற படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்துள்ளார். அதன் பின்னர் சில காரணங்களால் அந்த வாய்ப்பு சூர்யாவின் கைக்கு சென்றுள்ளது என்றும் விஜயுடன் நடந்த போட்டோஷூட் போட்டோவும் போட்டு வெளியிட்டுள்ளார் லைலா.

"கர்பத்திலும் லிப் லாக் போட்டோ போட்ட ஏமி ஜாக்சன்"

மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் நடிகை ஏமி ஜாக்சன்க்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன். இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தால் பார்ப்போர் அனைவரையும் பதற வைத்துள்ளார்.

தனது கணவருடன் கடற்கரையில் லிப் லாக் முத்தமிடும் காட்சியை படம்பிடித்து அதை சமூக வலைதளங்களிலும் ஏமி ஜாக்சன்  போட்டுள்ளார். இதற்குமுன்பு எமி தன்னுடைய காதலனுடன் கடற்கரையில் பிகினி போட்டபடியே படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.