கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம், விருது விழா ஒன்றில், பிரபல நடிகர் துல்கர் சல்மான் 'ஐ லவ் யூ'  என அனைவர் மத்தியிலும் கூறிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: படுக்கையறையில் படு மோசமான போஸ்..! மொத்த அழகில் இளசுகளை ஈர்த்து... பெருமூச்சு விட வைத்த சிருஷ்டி டாங்கே!
 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியாகிய, 'அறம்', 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்கள், முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் சென்னையில் நடந்த விருது விழா ஒன்றில், பிரபல மலையாள நடிகரும்... நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான 'மகாநடி' படத்தில் ஜெமினிகணேஷனாக நடித்த துல்கர் சல்மானும் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்: சிம்பு திருமணம் எப்போது? வருங்கால மனைவி யார்... புடிச்சாலும் புளியம் கொம்பை பிடித்த லிட்டில் சூப்பர் ஸ்டார்!
 

'அறம்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருதை துல்கர் சல்மான் நயன்தாராவிற்கு வழங்கினார். அப்போது நயன்தாரா பற்றி, தொகுப்பாளர் ஒரு சில வார்த்தைகள் பேச சொன்ன போது. 'ஐ லவ் யூ' நயன்தாரா. நான் உங்களின் தீவிர ரசிகன் என கூறி அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தினர்.

தொடர்ந்து பேசிய இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'ராஜா ராணி' திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்றும், இந்த படத்தில் ஜெய் பேசும் வசனத்தை, நயன்தாராவிடம் பேசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.