2018ம் ஆண்டு சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் "மாநாடு" படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இடையே கால்ஷீட் சொதப்பல் காரணமாக சிம்புவை படத்தில் இருந்து நீக்கியதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது. இதனால் கடுப்பான சிம்பு "மகா மாநாடு" என்ற படத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து தயாரிப்பாளருக்கும்,  சிம்புவிற்கும் இடையே நடைபெற்ற பல கட்ட பஞ்சாயத்துகளுக்குப் பிறகு "மாநாடு" படத்தில் நல்ல பிள்ளையாக நடிப்பதாக ஒப்புக்கொண்டார். மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமியராக நடிக்க உள்ளதாகவும், அதற்கான பெயரை ரசிகர்களே பரிந்துரைக்கலாம் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஏற்கனவே அறிவித்திருந்தார்.  அப்படி எந்த ரசிகர் கூறும் பெயர் சிம்புவிற்கு வைக்கப்படுகிறதோ, அவர் ஒரு நாள் முழுவதும் மாநாடு ஷூட்டிங் செட்டில் இருக்கலாம் என்ற அதிரடி ஆபரையும் கொடுத்திருந்தனர். 

இதையும் படிங்க: தமிழ்நாடுய்யா இது... ரஜினியை ஆள அனுமதிக்க முடியாது... ஆவேசமாக கர்ஜிக்கும் இயக்குநர் பாரதிராஜா..!

இதை கேட்ட சிம்பு ரசிகர்கள் பாட்ஷா, குலாம் நபி ஆசாத், மாலிக், சாகிப், இப்ராகிம், அப்துல் கலாம், காதர்,  அப்துல் ராயீஸ் ஏன் சிலர் ஓசாமா பின்லேடன் பெயரைக் கூட பரிந்துரைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிம்புவின் மாநாட்டில் கலந்த அப்பா, மகன்... பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மெகா அப்டேட்...!

இந்நிலையில் மாநாடு படத்தில் சிம்புவிற்கு என்ன பெயர் வைக்கப் போறாங்க தெரியுமா?. அப்துல் காலிக் என்ற பெயரை தேர்வு செய்துள்ளாராம் இயக்குநர் வெங்கட் பிரபு.  கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் இல்லையா? அதன்படி சிம்புவிற்கு அப்துல் காலிக் என்ற பெயரை பரிந்துரைத்த ரசிகர் ஒரு நாள் முழுவதும் மாநாடு செட்டில் இருக்கப்போறார்.