“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!
இதையடுத்து ஜோதிகாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து திரெளபதி இயக்குநர் மோகன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா கோவில்கள் பற்றி பேசியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா, பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது.
இதையும் படிங்க: ஷூட்டிங் எடுக்க மட்டும் வர்றீங்க...விஜய் மாதிரி உங்களுக்கும் பொறுப்பு இருக்கு...புதுச்சேரி முதல்வரின் அதிரடி!
எல்லாருக்கும் கோரிக்கை, ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசியிருந்தார்.
ஜோதிகாவின் இந்த சர்ச்சை கருத்து சோசியல் மீடியாவில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ஜோதிகாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு திரெளபதி இயக்குநர் பதிலளிக்காதது வருத்தமளிப்பதாக ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: ட்ரையல் ரூமில்... ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் மீரா மிதுன் பார்த்த காரியம்... செம்ம கடுப்பில் நெட்டிசன்கள்...!
இதையடுத்து ஜோதிகாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து திரெளபதி இயக்குநர் மோகன் ட்வீட் செய்துள்ளார். அதில், அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள்.. என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.