Asianet News Tamil

ட்ரையல் ரூமில்... ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் மீரா மிதுன் பார்த்த காரியம்... செம்ம கடுப்பில் நெட்டிசன்கள்...!

கவர்ச்சி காட்டுகிறேன் என்ற பெயரில் ஒரே அடியாக எல்லை தாண்டி வரும் மீரா மிதுன், துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் தங்களது உடையை போட்டு பார்க்க பயன்படுத்தும் ட்ரையல் ரூமில் பார்த்த மோசமான காரியம் நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Netizens Slams Meera Mithun For Posting Transparent Dress photo from Trial Room
Author
Chennai, First Published Apr 23, 2020, 4:11 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானெல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார். அங்கு போயும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இதையும் படிங்க: சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்...!

 கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை. மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. 

இதையும் படிங்க: நயன்தாரா என்ன யோக்கியமா..? வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார். மேலும் சாதாரண நாட்களை விட லாக்டவுன் நேரத்தில் படுகவர்ச்சி உடையில் போட்டோ வெளியிடுவது, ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோவை ஷேர் செய்வது என்று கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறார். 3 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் எனக்கு இருப்பது போன்ற புகழ் பல பிரபல நடிகைகளுக்கே கிடையாது. எல்லோரும் என்ன பார்த்து பொறாமைபடுறாங்க. என் போட்டோ ஷூட்டை பார்த்து நிறைய கோலிவுட் பிரபலங்கள் காப்பியடிக்கிறாங்க என்று விளம்பரம் தேடுவதற்காக சகட்டு மேனிக்கு எதையாவது பேசிவருகிறார். 

இதையும் படிங்க: “நாயகி” சீரியல் நடிகை வித்யாவா இது?... குட்டை டவுசரில் கவர்ச்சி தூக்கலாக கொடுத்த ஹாட் போஸ்...!

கவர்ச்சி காட்டுகிறேன் என்ற பெயரில் ஒரே அடியாக எல்லை தாண்டி வரும் மீரா மிதுன், துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் தங்களது உடையை போட்டு பார்க்க பயன்படுத்தும் ட்ரையல் ரூமில் பார்த்த மோசமான காரியம் நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. செம்ம ட்ராஸ்பிரன்டாக இருக்கும் கறுப்பு உடையில் எடுத்த படுகவர்ச்சியான செல்ஃபியை வெளியிட்டுள்ளார். மார்பு, தொப்புள் என மறைக்க வேண்டிய அனைத்து அங்கங்களையும் அப்பட்டமாக காட்டி செல்ஃபி எடுத்ததோடு மட்டுமல்லாது, அதை சோசியல் மீடியாவிலும் ஷேர் செய்துள்ளதால் நெட்டிசன்கள் கடுப்பில் உள்ளனர். மீரா மிதுனின் இந்த மோசமான போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? என்று சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios