ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.  திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.

கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். 

கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால்,  முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார். அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, தற்போது நடிகைகளையும் வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டார். சமந்தா, த்ரிஷா, தமன்னா என முன்னணி நடிகைகளை தேடி, தேடி வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி. இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை வம்பிழுந்துள்ளார். 

இதையும் படிங்க: “நாயகி” சீரியல் நடிகை வித்யாவா இது?... குட்டை டவுசரில் கவர்ச்சி தூக்கலாக கொடுத்த ஹாட் போஸ்...!

ஸ்ரீரெட்டி உடை மற்றும் அவருடைய பாலியல் உறவு குறித்து முகநூலில் கமெண்ட் செய்பவர்களை தாறுமாறாக கிழித்து பதிவிட்டிருந்தார். என் உடல், என் விருப்பம் அதை எல்லாம் கேட்க நீங்க யாரு? என்ற ரீதியில் படு ஆவேசமாக பதிலளித்திருந்தார். இதை நெட்டிசன்கள் யாரும் சட்டை செய்யவில்லை போல் தெரிகிறது. இதனால் கடுப்பான ஸ்ரீரெட்டி, நயன்தாராவுடன் தன்னை ஒப்பிட்டு காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

அதில், பெரிய ஹீரோயின்களின் உறவு பற்றி பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?...நயன்தாரா கூட திருமணமானவர், திருமணமாகதவர் ஆகியோருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். உங்களில் யாருக்காவது அவரை கமெண்ட் செய்ய தைரியம் இருக்கா?... அது தான் வளர்ந்த ஸ்டார் ஹீரோயின்களுக்கும், முன்னுக்கு வர போராடும் நடிகைகளிடமும் நீங்கள் காட்டும் வித்தியாசம் என படு ஆவேசமாக மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார்.