- Home
- Cinema
- OTT Must Watch Movie : திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடன் ஒரு சூப்பர் க்ரைம் த்ரில்லர் - ஓடிடியில் செம ஒர்த்தான படம்
OTT Must Watch Movie : திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடன் ஒரு சூப்பர் க்ரைம் த்ரில்லர் - ஓடிடியில் செம ஒர்த்தான படம்
Malayalam Crime Thriller : மலையாள சினிமாவில் கடந்த 2020ம் ஆண்டு ரிலீஸ் ஆன க்ரைம் த்ரில்லர் படம் ஒன்று ஆறு ஆண்டுகள் கடந்தும் ஓடிடியில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Must Watch Malayalam Movie
மலையாள சினிமாவுக்கு ஓடிடி தளங்களில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வித்தியாசமான கதைக்களம் மற்றும் அழுத்தமான திரைக்கதையுடன் வெளியாகும் மலையாள திரைப்படங்களுக்கு தமிழ் மொழி ரசிகர்கள் மத்தியிலும் தனி வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக பல மலையாள படங்கள் தமிழ் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது கவனம் பெற்றுள்ள ஒரு திரைப்படம் 'இனி உதரம்' (Ini Utharam). சஸ்பென்ஸ் மற்றும் விசாரணையை மையமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மலையாளப் பதிப்பு திரையரங்குகளில் வெளியான நிலையில், தமிழ் வெர்ஷன் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் தொடங்கியது முதல் இறுதி வரை பல்வேறு திருப்பங்களுடன் நகர்வதால், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு இது அடிபொலி சாய்ஸ் ஆக இருக்கும்.
OTT Thriller Movies : ஓடிடியில் டஜன் கணக்கான ட்விஸ்டுகள் நிறைந்த டாப் 5 சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்
என்ன கதை?
கதைப்படி, ஜானகி என்ற மருத்துவர் இருக்கிறார். ஒரு நாள் காவல் நிலையத்திற்குச் செல்லும் அவர், தான் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்கிறார். ஆனால், அவரது பேச்சை காவல்துறையினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஊடகங்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ஜானகிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஜானகி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தான் கொன்றதாகக் கூறப்படும் நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தை தன்னால் காட்ட முடியும் என்கிறார். இதையடுத்து அவர் காவல்துறையினர் மற்றும் ஊடகத்தினரை அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு செல்கிறார். இந்த தகவல் பரவியதால் ஏராளமான கிராம மக்களும் அந்த இடத்தில் திரள்கின்றனர்.
அங்கு தோண்டிப் பார்க்கும்போது இரண்டு சடலங்கள் கிடைக்கின்றன. இதனால் வழக்கு திடீரென தீவிரமடைகிறது. ஆனால், அடுத்ததாக ஜானகி கூறும் தகவல் விசாரணையின் போக்கையே மாற்றுகிறது. அந்த இருவரையும் தான் கொலை செய்யவில்லை என்றும், ஒரு காவல்துறை அதிகாரிதான் அவர்களைக் கொன்றதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களையும் ஜானகி முன்வைக்கிறார். இதனால் விவகாரம் மேலதிகாரிகளின் கவனத்திற்குச் செல்கிறது. காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு விசாரணையை முன்னெடுக்கிறார். விசாரணை தீவிரமடையும்போது, இந்தக் கொலை வழக்கின் பின்னணியில் ஒரு அமைச்சருக்கும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.
அப்படியானால் கொலை செய்யப்பட்ட அந்த இருவர் யார்? அவர்களுக்கும் ஜானகிக்கும் என்ன தொடர்பு? ஜானகி கூறுவது உண்மையா? காவல்துறை அதிகாரி மீதான குற்றச்சாட்டு உண்மையா? அரசியல் புள்ளி ஒருவருக்கு இதில் என்ன பங்கு? இறுதியில் உண்மையான குற்றவாளிகள் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறார்கள்? என அடுத்தடுத்து எழும் கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் மீதிக்கதை.
ஓடிடியில் எங்கே பார்க்கலாம்?
'சூரரைப் போற்று' படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுதீஷ் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கலாபவன் ஷாஜோன், ஹரிஷ் உத்தமன், சித்திக், சந்துநாத் ஜி. நாயர், ஜாபர் இடுக்கி, சித்தார்த் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். 'குஷி', 'ஹாய் நன்னா' உள்ளிட்ட படங்களில் தனது மெலோடியான இசையால் ரசிகர்களை கவர்ந்த இவர், இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
'இனி உதரம்' படம் பிரபல ஓடிடி தளமான ஜீ5-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. சஸ்பென்ஸ், போலீஸ் விசாரணை, அரசியல் பின்னணி மற்றும் அடுத்தடுத்து வரும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட படங்களை விரும்புபவர்கள் இந்த மலையாள க்ரைம் த்ரில்லரை தங்களது ஓடிடி வாட்ச் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

