திரெளபதி 2 படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.

இயக்குனர் மோகன் ஜி 2020 ஆம் ஆண்டு 'திரெளபதி' படத்தை இயக்கினார். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் சர்ச்சைக்குரிய படமாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதனை தொடர்ந்து தற்போது 'திரெளபதி 2' படத்தையும் அவர் இயக்கியுள்ளார். இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷி தான் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரக்சனா இந்துசூடன் நடித்துள்ளார். இப்படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'தராசுகி ராம்' என்ற பாடல் நேற்று வெளியாகியுள்ளது. இப்பாடல் வரிகளை மோகன் ஜி எழுதியுள்ளார். ஜிப்ரான், குரு ஹரிராஜ், கோல்ட் தேவராஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.