- Home
- Cinema
- மீண்டும் அஜித்தின் மச்சான் உடன் கூட்டணி அமைக்கும் மோகன் ஜி... அடுத்த அதிரடிக்கு தயாரான திரெளபதி காம்போ
மீண்டும் அஜித்தின் மச்சான் உடன் கூட்டணி அமைக்கும் மோகன் ஜி... அடுத்த அதிரடிக்கு தயாரான திரெளபதி காம்போ
ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ள இயக்குனர் மோகன் ஜி, தற்போது தனது அடுத்த படத்தில் ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

பழைய வண்னாரப்பேட்டை திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து இவர் இயக்கிய திரெளபதி திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தியது. நாடகக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்டு தான் நாயகனாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியான சமயத்தில் அரசியல் கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் இப்படம் பேசுபொருளாக இருந்தது. இதனால் சர்ச்சைக்குரிய இயக்குனர் என பெயரெடுத்தார் மோகன் ஜி. திரெளபதி படத்தின் வெற்றிக்கு பின்னர் ருத்ர தாண்டவம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இதில் மோகன் ஜி, தர்ஷா குப்தா, கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படியுங்கள்... ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள் உள்பட... இத்தனை தமிழ் படத்தில் நடித்துள்ளாரா குக் வித் கோமாளி ஆண்ட்ரியன்..!
இதற்கு அடுத்தபடியாக மோகன் ஜி இயக்கிய திரைப்படம் தான் பகாசூரன். இப்படத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீசான இப்படமும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன்மூலம் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ள இயக்குனர் மோகன் ஜி, தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ரிச்சர்டு ரிஷியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சில மீடியாக்களுக்கு இவர் யாருன்னு தெரியுதா... காசி கங்கா ஆரத்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்டு ரிஷி சார். நீங்களா எதாவது கிளப்பிவிடாதீங்க. அப்பறம் முக்கியமான செய்தி, என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் தான். அறிவிப்பு விரைவில் வரும்” என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ரிச்சர்டு நான் கடவுள் ஆர்யா கெட் அப்பில் இருப்பதால் மீண்டும் ஒரு அதிரடி கதையம்சத்துடன் கூடிய திரைப்படத்தோடு மோகன் ஜி தயாராகி வருவது போல் தெரிகிறது.
இதையும் படியுங்கள்... திருமணமான நடிகைக்கு ஸ்கெட்ச் போடும் லைகா... ஏகே 62-வில் அஜித்துடன் ரொமான்ஸ் செய்யப்போகும் ஹீரோயின் இவரா?