ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள் உள்பட... இத்தனை தமிழ் படத்தில் நடித்துள்ளாரா குக் வித் கோமாளி ஆண்ட்ரியன்..!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள ஆண்ட்ரியன் தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் தகவல் வெளிவந்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக பிற மொழிகளில் ஹிட் ஆன ரியாலிட்டி ஷோக்களை காப்பி அடித்து தான் தமிழில் நடத்துவார்கள். ஆனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியை பிறமொழி சேனல்களும் காப்பியடித்துள்ளன என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சி தற்போது கன்னடம் உள்பட சில மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷலே இதன் கான்செப்ட் தான். வழக்கமாக குக்கிங் நிகழ்ச்சி என்றால் பரபரப்பான ஒன்றாக இருக்கும், ஆனால் இந்நிகழ்ச்சி முற்றிலும் ஜாலியான ஒன்றாக இருப்பதனால் இது மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனது. இதுவரை தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது அந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குக் வித் கோமாளியில் இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் இல்லாத வகையில் இந்த முறை வெளிநாட்டு போட்டியாளர் ஒருவரை களமிறக்கி உள்ளனர். பிரெஞ்ச் நாட்டு மாடல் அழகியான ஆண்ட்ரியன் தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வெளிநாட்டு போட்டியாளராக களமிறங்கி உள்ளார். இவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழில் சரளமாக பேசி அசத்தி வருகிறார். இவரின் பேசும் தமிழுக்கே தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... என்ன பிரச்சனை... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகியது ஏன்? - லீக்கான தகவல்
தமிழைப் போல் சமையலிலும் கலக்கி வரும் ஆண்ட்ரியன் தொடர்ந்து இரண்டு வாரம் அட்வாண்டேஜ் டாஸ்க்குகளில் வெற்றிபெற்று அசத்தினார். அதுமட்டுமின்றி கடந்த வாரம் நடந்து முடிந்த இம்யூனிட்டி டாஸ்க்கில் வெற்றி பெற்று அண்மையில் முடிந்த எபிசோடில் எலிமினேஷன் ஃப்ரீ ஜோனில் இடம்பெற்று சமைக்காமல் ஜாலியாக சக போட்டியாளர்களை கலாய்த்து வந்தார்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியன் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் இடம்பெறும் ஸ்டைல் பாடலில் ரஜினியுடன் சேர்ந்து நடனமாடி உள்ள இவர், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்திலும் நடித்திருக்கிறார். அப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ஆண்ட்ரியன் நடித்திருந்தார்.
மேலும் எனக்குள் ஒருவன், ஸீரோ போன்ற படங்களிலும் துணை நடிகையாக நடித்திருக்கிறார். ஆண்ட்ரியனின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே தமிழில் டப்பிங் பேசி விடுவாராம். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆகிவிட்டதால், அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்த மணிமேகலை... வெங்கடேஷ் பத் போட்ட நெகிழ்ச்சி பதிவு!