என்ன பிரச்சனை... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகியது ஏன்? - லீக்கான தகவல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருந்த மணிமேகலை திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதன் பின்னணி என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் பேமஸ் ஆன குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 10 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதிலிருந்து தற்போது வரை கிஷோர் மட்டுமே எலிமினேட் ஆகி உள்ளார்.
நேற்றைய எபிசோடிலும் யாராவது ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடுவர்கள் இருவரும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என அறிவித்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் குக்குகளும், கோமாளிகளும் உற்சாகத்தில் திளைத்துப்போயினர். நேற்றைய எபிசோடை விட பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் அது மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு திடீரென விலகியது தான்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து கோமாளியாக கலந்துகொண்டு கலக்கி வருபவர் மணிமேகலை. லேடி கெட் அப்பை விட பாய்ஸ் கெட்-அப் இவருக்கு சூப்பராக செட் ஆனதால், இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் பாய்ஸ் கெட்-அப்பில் தான் வருவார் மணிமேகலை. அதிலும் நேற்றைய எபிசோடில் நானே வருவேன் படத்தில் வரும் தனுஷின் கதிர் கெட்-அப்பில் வந்து மாஸ் காட்டினார் மணி. அவரின் இந்த லுக் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருந்தது.
இதையும் படியுங்கள்... சூடுபிடிக்கும் லியோ பட பிசினஸ்... இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் ரூ.400 கோடி வசூலை தட்டிதூக்கி சாதனை
நானே வருவேன் கெட்-அப்பில் வந்து இனி நானே வரமாட்டேன் என்கிற திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மணிமேகலை. நேற்றைய எபிசோடில் கூட ஜாலியாக அனைவரையும் கிண்டலடித்துக் கொண்டு இருந்த மணிமேகலை திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு செய்தது ஏன் என்பது தான் பலரது கேள்வியாகவும் உள்ளது. மணிமேகலையும் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொல்லவில்லை.
அவர் விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. சிலர் அவர் கர்ப்பமாக இருப்பதன் காரணமாகவே இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறி வருகின்றனர். ஆனால் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. மறுபுறம் அவருக்கும், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் மணிமேகலை விலகியதாக கூறப்படுகிறது. மணிமேகலையில் பதிவும் அதனை சூசகமாக உறுதிப்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அதில அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களின் பெயர்களை குறிப்பிடவே இல்லை. அவர்களுக்கு நன்றி என்றும் ஒரு இடத்தில் கூட பதிவிட வில்லை. மணிமேகலையில் இந்த பதிவுக்கு அந்நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணி ரிப்ளை செய்திருந்தார். அதற்கு மணியும் நன்றி என பதில் அளித்திருந்தார். இதன்மூலம் அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுடன் ஏற்பட்ட மோதலே மணிமேகலையின் இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... அவமானப்படுத்திய தயாரிப்பாளரை ஃபாரின் காரில் வந்து அலறவிட்ட சூப்பர்ஸ்டார்- முதல் காரில் ரஜினி செய்த மாஸ்சம்பவம்