இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவருமான லாஸ்லியா தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடிக்கவும் துவங்கி உள்ளார்.

கடைசி நேரத்தில், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஓட்டுகள் கொஞ்சம் குறைவாக கிடைத்ததால், பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை கை பற்ற முடியாமல் போனது.

எனினும் இவரும், பிரபல சின்னத்திரை நடிகர் கவினும் காதலித்து வருவது போல் தங்களை வெளிக்காட்டி கொண்டனர். ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் இது குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை.

காதல் விஷயத்தில் லாஸ்லியா கவனம் செலுத்தவில்லை என்றாலும், திரைப்படங்கள் நடிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அந்த வகையில், நடிகர் ஆரியுடன் ஒரு படம் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய பெயரை கெடுக்கும் விதத்தில், வேறு ஏதோ ஒரு பெண் நடித்த ஆபாச வீடியோவை வெளியிட்டு அதில் இருப்பவர் லாஸ்லியா என்கிற தகவலை சிலர் பரப்பினர். ஆனால் உண்மை புரிந்து கொண்ட ரசிகர்கள் இது லாஸ்லியா இல்லை. வேறு ஒரு பெண் என்றும், வீணாக எந்த பெண்ணின் மீதும் அபாண்டமாக பழி போடாதீர்கள் என, இந்த வேலையை செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது காதல் விஷயத்திற்கே மிகவும் வருத்தமடைந்த அவருடைய குடும்பத்திற்கு இப்படி பட்ட வதந்திகள் தெரிந்தால், லாஸ்லியாவின் சினிமா கனவே நொறுங்கி போகும்... என்பதை புரிந்து பலரும் இவருக்கு ஆதரவாக சமூக வளைத்ததில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.