“தல” அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா?... உடனடியாக மடக்கி பிடித்த போலீசார்...!

பின்னர் அந்த கால் எங்கிருந்த வந்தது என சைபர் கிரைமில் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர். 

Do you know Who give bomb threat call to thala ajith house

கடந்த ஜூன் 18ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக 108 ஆம்புலன்ஸ் எண்ணிற்கு அழைத்து மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட, மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் ரஜினி வீட்டை சோதனையிட்டனர். அதன் பின்னர் அந்த போன் கால் வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், எச்சரித்து அனுப்பினர். 

Do you know Who give bomb threat call to thala ajith house

 

இதையும் படிங்க: தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குட்டி பாப்பா யார் தெரியுமா?... வைரல் போட்டோ...!

இந்நிலையில் ஜூலை 4ம் தேதி அன்று தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு, இணைப்பை துண்டித்துள்ளார். உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டை சல்லடை போட்டு சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பின்னர் அந்த போன் கால் வதந்தி என்பது கண்டறியப்பட்டது. 

Do you know Who give bomb threat call to thala ajith house

 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் வெளியான பிக்பாஸ் சாக்‌ஷியின் ரகசியம்...பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்...!

இதை தொடர்ந்து, தல அஜித் வீட்டிலும் வெடிகுண்டு உள்ளதாக போன் செய்த மர்ம நபர், அழைப்பை உடனடியாக துண்டித்து விட்டார்.எனவே போலீசாரும் அடித்து பிடித்து கொண்டு,  சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது, அங்கு வெடிகுண்டு போல் எந்த பொருளும் கிடைக்கவில்லை. எனவே அது வதந்தி என தெரியவந்தது. 

Do you know Who give bomb threat call to thala ajith house

 

இதையும் படிங்க: “பயந்துட்டியா குமாரு”... ட்விட்டரில் பிளாக் செய்த வனிதாவை பங்கமாய் கலாய்த்த கஸ்தூரி...!

பின்னர் அந்த கால் எங்கிருந்த வந்தது என சைபர் கிரைமில் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர்.  அந்த எண் விழுப்புரத்தைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்,  மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே தளபதி விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios