இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தாஜ் நூர். சேலத்தில் பிறந்து வளர்ந்து, இசை புயல் ஏ.ஆர்.ரகுமானிடம், உதவியாளராக இருந்து பின் ஒரு இசையமைப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கியவர் தாஜ் நூர்.

ஸ்டாபெரி, நய்யப்புடை, என 10 திற்கும் மேற்பட்ட படங்களுக்கு தாஜ் நூர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இவரின் மகள் திருமணம் இன்று நடைபெற்றது.

பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த வகையில், திமுக கட்சி தலைவர் ஸ்டாலின், தாஜ் நூர் அவர்களின் இல்லாதிருமணவிழாவில் நேரடியாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மிக பிரமாண்டமாக நடைபெற்ற, இசையமைப்பாளர் தாஜ் நூர் மகளின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.