Asianet News TamilAsianet News Tamil

திரும்புற பக்கமெல்லாம் கஞ்சா.. இதுல பாட்டு வேறயா- விருமன் பாடலை விமர்சித்த அதிமுக பிரபலம்.. பதிலடி கொடுத்த MLA

கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தில் இடம்பெறும் கஞ்சா பூ கண்ணால பாடலை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திமுக எம்.எல்.ஏ மயிலை வேலு பதிலடி கொடுத்துள்ளார்.

DMK MLA Mylai Velu respond to ADMK Jayakumar's accusation about viruman movie Kanja Poovu Kannala song
Author
Tamil Nadu, First Published Aug 15, 2022, 11:17 AM IST

கார்த்தி - யுவன் கூட்டணி என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட், என சொல்லும் அளவுக்கு இதுவரை இவர்கள் இணைந்து பணியாற்றிய பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ள படம் விருமன்.

விருமன் படத்திலும் பாடல்கள் அனைத்தும் ரிலீசுக்கு முன்பே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக அதில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணால மற்றும் மதுர வீரன் ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. இதனிடையே இதில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணால பாடலை விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... S.J.Suryah : 54 வருஷமா முரட்டு சிங்கிளாக இருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு விரைவில் திருமணம்..! பொண்ணு யார் தெரியுமா?

அவர், தமிழ்நாட்ல ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற.. என குறிப்பிட்டு திமுக அரசை கடுமையாக சாடி இருந்தார். அவரின் இந்த டுவிட் வைரல் ஆனதை அடுத்து, அதற்கு திமுக தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ-வான மயிலை வேலு போட்டுள்ள டுவிட்டில் “படத்த வைச்சி ஒப்பீடு செய்யாரரு அறிவாளி.. அப்போ இந்த படத்துப்படி பார்த்தா உங்க தலைவர் இப்படித்தான் ஆட்சி பண்ணிருக்கார்..” என குறிப்பிட்டு எம்.ஜி.ஆர் நடித்த சொல்லித்தாருங்கள்... பள்ளி பாடங்கள்” என்கிற பாடலை பதிவிட்டுள்ளார். இருவரின் பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... காதலினு சொன்னதுக்கு மன்னிச்சிருங்க ஷங்கர் சார்.. அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி- அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்

Follow Us:
Download App:
  • android
  • ios