இவர் கடற்கரை, வெளிநாடு என அடிக்கடி சுற்றுலா சென்று அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். 

மாடலிங்காக கலைத்துறைக்கு அறிமுகமாகியிருந்த திவ்யபாரதி. தற்போது அறியப்பட்ட நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார். பேஷன் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த இவர் பல கிரீடங்களையும் வென்றார். தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த பேச்சிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சதீஷ் செல்வகுமார் இயக்கி உள்ள இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் இவர், இதில் பகவதி பெருமாள், அருண்குமார் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவான இந்த படத்திற்கு தேனீஸ்வரர் படத்தொகுப்பு செய்திருந்தார். படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...அரவிந்த்சாமியின் ரெண்டகம்... படத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

View post on Instagram

இருந்த போதிலும் இதன் நடிகையான திவ்யபாரதி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்ட இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். தற்போது மதில் மேல் காதல், இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள ஒரு படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின்ரவுக்கு ஜோடியாக, மலையாளத்தில் வெளியானஇஷ்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் கதிருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வரும் இவர் கடற்கரை, வெளிநாடு என அடிக்கடி சுற்றுலா சென்று அங்கு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...என்னது....விஜய்யின் தளபதி 67 ஹாலிவுட் ரீமேக்கா? தீயாய் பரவும் தகவல் இதோ

View post on Instagram