வாரிசு படம் பார்த்து ஆனந்தக் கண்ணீர்விட்ட தந்தை... நெகிழ்ந்துபோன இயக்குனர் வம்சி - வைரல் வீடியோ
வாரசுடு படம் பார்த்து முடித்ததும் எமோஷனல் ஆன இயக்குனர் வம்சியின் தந்தை, ஆனந்தக் கண்ணீர்விட்டு தனது மகனை கட்டியணைத்து பாராட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படம் தமிழில் வாரிசு என்கிற பெயரிலும், தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரிலும் ரிலீஸாகி உள்ளது. வெளியானது முதல் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழில் கடந்த ஜனவரி 11-ந் தேதியே ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம், தெலுங்கில் நேற்று தான் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன முதல் நாளே முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்களுக்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்குமோ அதே அளவு வரவேற்பு வாரசுடு படத்துக்கும் கிடைத்து வருகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!
நேற்று வாரசுடு படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இயக்குனர் வம்சியும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் சேர்ந்து அப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இதையடுத்து தயாரிப்பாளர் தில் ராஜு பட்டாசு வெடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில், வாரசுடு படத்தை நேற்று தனது தாய், தந்தை மற்றும் மனைவியுடன் பார்த்துள்ளார் இயக்குனர் வம்சி. அப்போது படம் பார்த்து முடித்ததும் எமோஷனல் ஆன இயக்குனர் வம்சியின் தந்தை, ஆனந்தக் கண்ணீர்விட்டு தனது மகனை கட்டியணைத்து பாராட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் வம்சி.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டு நடத்தப்படுவது ஏன்?