Actor Vikram : சேது படம் விக்ரமுக்கு திருப்பு முனையாக அமைந்தாலும், விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது என இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
ராஜகுமாரன் பேட்டி
தமிழ் சினிமாவில் 90-களில் பேமஸான இயக்குனராக வலம் வந்தவர் ராஜகுமாரன். நடிகை தேவையானியின் கணவரான இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் தனது திரையுலக பயணம் குறித்து பல முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட அவர், நடிகர் விக்ரம் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
விக்ரமுடன் பிரச்சனையா?
அதில் அவர் பேசியதாவது: “விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை இயக்கியபோது எனக்கும் நடிகர் விக்ரமுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. எனக்கும் சரத் கம்பெனிக்கும் தான் பிரச்சனை இருந்தது. அந்த படத்தில் நடிக்க விக்ரம் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்ததினால் அவர் கொஞ்சம் அதிகமாக சம்பளம் எதிர்பார்த்தார். ஆனால், தயாரிப்பு தரப்பு கொடுக்க மறுத்துவிட்டது. மற்றபடி எனக்கும் விக்ரமுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

விக்ரமுக்கு என் படம் பிடிக்காது
ஆனால், விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் பிடிக்காது என நடிகர் விக்ரம் ஏதோ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. சேது படம் விக்ரமுக்கு திருப்பு முனையாக அமைந்தாலும், விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. சேது படம் விக்ரமை ஒரு நடிகனாக காண்பித்து இருக்கலாம். ஆனால், அவரை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு போய் சேர்த்தது என்னுடைய விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தான்.
விக்ரம் நல்ல நடிகர் இல்லை
என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்றால் கை, காலை உடைத்து, கண்ணை மாற்றி மாற்றி பார்த்து நடிப்பது நடிப்பு கிடையாது. விக்ரமும் நல்ல நடிகரெல்லாம் கிடையாது. ஒன்னு ரஜினி சார் மாதிரி நடிப்பாரு, இல்லைன்னா கமல் மாதிரி நடிப்பாரு அவ்வளவுதான்” என கூறியுள்ளார். விக்ரம் குறித்து ராஜகுமாரன் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... நினைக்கும் போதெல்லாம் பல நடிகைகளுடன் உல்லாசம்.. பணத்தை தண்ணீராய் வாரி இறைத்த நீராவி முருகன்.. அதிர்ச்சி தகவல்
