இயக்குநர், கதையாசிரியர், தயாரிப்பாளர் என பலமுகங்களைக் கொண்டவர் இயக்குநர் ஆர்.கண்ணன். ஃபேமிலி, காமெடி, ஆக்‌ஷன் என சினிமாவிற்கு தேவையான அனைத்தையும் கலக்கி எடுப்பதில் மனிதர் வல்லவர். 2008ம் ஆண்டு வெளியான வினய், பாவனா நடிப்பில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

அதன் பின்னர், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, பூமாரங், இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், மாறுபட்ட கதை அமைப்பால் ரசிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. 

இதையும் படிங்க: "தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள்"... திரெளபதி விஷயத்தில் பலித்துவிட்டதா பா.ரஞ்சித் வாக்கு??

தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து பிஸ்கோத் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், இவன் தந்திரன் படத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார். 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

இவன் தந்திரம் படம் என்னுடைய ஒன்றரை வருட உழைப்பு, படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்திருந்தது. ஆனால் படம் வெளியாகி 3வது நாளே ஸ்டிரைக் அறிவிச்சிட்டாங்க. அதனால எந்த ஷூட்டிங்கும் நடக்கல, எந்த தியேட்டரிலும் படம் ஓடல. என்ன பண்றதுனே தெரியல. இதுவே விஜய், அஜித் படம்னா இப்படி பண்ணியிருப்பாங்களா?... யாரோ ஒரு மூன்றாவது நபர் படங்கிறதால தானே, திடீரென ஸ்டரைக் அறிவிச்சிட்டாங்க என்று நொந்து போய் பேசியுள்ளார்.