'அட்டகத்தி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகத்தில் இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தை இயக்கினார். இந்த படம் ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்களையும் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

மேலும் செய்திகள்: தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம் இதோ...
 

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து. மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து 'காலா' படத்தை இயக்கினார். கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரஜினி ரசிகர்கள் மத்தியில் இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது.

பின் இயக்குனர் என்பதை தாண்டி, சில படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் நீலம் புரொடக்ஷன் சார்பில், இவர் தயாரித்த பரியேரம் பெருமாள், இரண்டாம் உலகா போரின் கதாசி குண்டு போன்ற திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவருக்கு லாபத்தையும் பெற்று தந்தது.

மேலும் செய்திகள்: 15 வயதில் வேற லெவல்..! முதல் முறையாக வெளிநாட்டு ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட டிடி..!
 

தயாரிப்பாளராக மாறிய பின்னர், இவர் அடுத்ததாக நடிகர் ஆர்யாவை கதாநாயகனாக வைத்து சல்பேட்டா என்கிற  திரைப்படத்தை இயக்குகிறார். இது குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக, நடிகர் ஆர்யா தன்னுடைய உடல் எடையை ஏற்றி... ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படங்கள் சில வெளியாகி வைரலானது. மேலும் எவ்வளவு கடினமான பயிற்சிகளை மேற்கொண்டார் என்பது குறித்தும் சில வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாய் பல்லவி..! வைரலாகும் புகைப்படங்கள்..!
 

மேலும் செய்திகள்: பிரமாண்டமாக நடந்த நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் - லட்சுமி உஜ்ஜைனி திருமண புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?
 

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் குத்து சண்டை போடுவது போல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குத்து சண்டை படத்தை இயக்குவதாக... இவரும் குத்து சண்டை கத்துக்குறாரோ... இது நெட்டிசன்கள் மைன்ட் வாய்ஸ் பாஸ்..