கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடங்கும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது நேரத்தை சோசியல் மீடியாவில் செலவிட்டு வருகின்றனர். தங்களது பிடித்த விஷயங்களானஉடற்பயிற்சி, சமையல், தோட்டக்கலை ஆகியவற்றை செய்து, அதனை வீடியோவாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் தங்களது பழைய புகைப்படங்களையும், மலரும் நினைவுகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது, ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பது, ஆன்லைன் பேட்டி என பிசியாக உள்ளனர். 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

தற்போது ஊரடங்கு நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட பல பிரபலங்களும் சோசியல் மீடியாவில் இணைந்து வருகின்றனர். அதன்படி நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். 28 மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் ஃபாலோவர்ஸ் இணைந்து இன்ஸ்டாவை திக்குமுக்காட செய்தனர். இதற்கு முன்னதாக பல பிரபலங்கள் டிக்-டாக்கை தடை செய்வதற்கு முன்பு அதில் அக்கவுண்ட் ஆரம்பித்து ஆட்டம் போட்டதை நாம் பார்த்தோம்.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் ட்விட்டரில் இணைந்துள்ளார். “சித்திரம் பேசுதடி”, “அஞ்சாதே”, “நந்தலாலா”,  “யுத்தம் செய்”, “முகமூடி”,  “பிசாசு”, “துப்பறிவாளன்”, “சைக்கோ” உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மிஷ்கின். சமீபத்தில் உதயநிதி கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞராக நடித்த “சைக்கோ” திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தது. இதனையடுத்து துப்பறிவாளன் 2 ஷூட்டிங் பணிகளை இயக்குநர் மிஷ்கின் வேகப்படுத்தினார். 

 

இதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!

லண்டனில் விஷால், பிரசன்னா ஆகியோருடன் “துப்பறிவாளன் 2” பட ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷால் - மிஷ்கின் இடையே மோதல் வெடித்தது. திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்ததாக இயக்குநர் மிஷ்கின் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது லாக்டவுன் காரணமாக அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விஷாலே அதை இயக்க உள்ளதாக தெரிகிறது. தன் படங்கள் மூலமாக ரசிகர்களுக்கு உலக சினிமாவை கண் முன் காட்டிய மிஷ்கின், ட்விட்டரில் இணைந்திருப்பது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. @DirectorMysskin என்ற ஐ.டி.யில் இணைந்துள்ள மிஷ்கினை சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.