தனுஷ் கூறியவாறே இன்டெர்வல் காட்சியில் திரையரங்கமே அதிருகின்றது என்று தான் கூறவேண்டும்.
மாமன்னன் திரைப்படம் உலக அளவில் இன்று வெளியாகி, வெற்றிகரமாக ஓடி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி பலர் இந்த திரைப்படத்தை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர். தான் நினைத்தவாறு படம் அமைந்து விட்டதாகவும், இனி படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார் இந்த படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.
தனுஷ் கூறியவாறே இன்டெர்வல் காட்சியில் திரையரங்கமே அதிருகின்றது என்று தான் கூறவேண்டும். மிக நேர்த்தியான கதையை, கனகச்சிதமாக கையாண்டுள்ளார் மாரி செல்வராஜ் என்றால் அது மிகையல்ல. வைகைப்புயல் வடிவேலு துவங்கி அனைவரின் நடிப்பையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : அஜித் ஒரு ஃபிராடு... காசு வாங்கிட்டு ஏமாத்திட்டான் - தயாரிப்பாளர் ஆவேசம்!
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாமன்னன் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த மாரி செல்வராஜின் வீடியோ ஒன்று இப்பொது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. அந்த பேட்டியில் அவர் பேசும்போது தான் ஒரு மிகப்பெரிய விஜய் fan என்றும் தன்னுடைய fan boy தருணங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
விஜய் படத்தை அடித்துப்பிடித்தாவது பார்த்துவிடுவேன் என்று கூறிய அவர் விஜய்க்கு ஒரு கதை சொல்லியிருப்பதாகவும் கூறி, அவருடைய ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார். ஆனால் அந்த கதையை ஒரு Fan ஆகா இல்லாமல் ஒரு இயக்குனராக, ஒரு பயங்கரமான கதையை அவரிடம் கூறியபோது "என்ன சார்" என்று சோகமாக பதில் அளித்துள்ளார் விஜய். ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் விஜயுடன் நிச்சயம் ஒரு படத்தில் பணியேற்றுவேன் என்று கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.
இதையும் படியுங்கள் : அஜித்தின் மச்சினிச்சியா இது? ஷாமிலியின் செம்ம ஹாட் போட்டோஸ்
