அஜித் ஒரு ஃபிராடு... காசு வாங்கிட்டு ஏமாத்திட்டான் - கமல் பட தயாரிப்பாளர் ஆவேசம்
நடிகர் அஜித் தன்னிடம் பணம் வாங்கிவிட்டு, அதை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
Ajith
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு. கமல்ஹாசனுக்கும், இப்படத்தை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனனுக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தை தயாரித்தவர் தான் மாணிக்கம் நாராயணன். நடிகர் விஜய் ஹீரோவாக அறிமுகமான மாண்புமிகு மாணவன் திரைப்படத்தை தயாரித்தவரும் இவர் தான்.
Manickam Narayanan
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதே மாணிக்கம் நாராயணன் தான். அவர் தயாரிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த முன் தினம் பார்த்தேனே திரைப்படத்தின் மூலம் தான் மகிழ் திருமேனி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. அப்படத்திற்கு பின் அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இதையும் படியுங்கள்... ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மகன் திருமண விழா! ஷங்கர் முதல் மணிரத்னம் வரை வாழ்த்த படையெடுத்து வந்த பிரபலங்கள்
Ajith
இந்நிலையில், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டியில் நடிகர் அஜித் தன்னை ஏமாற்றிவிட்டதாக சரமாரியாக சாடி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “அஜித் மாபெரும் நடிகர், அதனால் தான் அவர் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் முதலில் மனுஷனாக வாழ வேண்டும். அவர் என்னிடம் பணம் வாங்கிவிட்டு திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டார். அந்த சமயத்தில் என்னிடம் ஆதாரம் இல்லாததால் ஏமாற்றிவிட்டார்.
Ajith
ஆனால் தற்போது என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவரெல்லாம் ஒரு ஜெண்டில்மேனே கிடையாது. அது அவருக்கு அவரே வைத்துக் கொண்ட பெயர், பத்திரிகையாளர்களுக்கு பணத்தை கொடுத்து அவரைப் பற்றி பெருமையாக எழுத சொல்லுகிறார். அவர் ஒரு ஃபிராடு. எனக்கு திமிரு ஜாஸ்தி. நீ பெரிய ஆளா இருந்தா உன்னவிட நான் பெரிய ஆள்னு நினைப்பவன் நான். மகிழ் திருமேனியை மனுஷனா நெனச்சு முன்தினம் பார்த்தேனே படம் எடுத்ததே மிகப்பெரிய தப்பு” என சரமாரியாக சாடி உள்ளார்.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் வீட்டுக்கு வந்த நோட்டீஸ்.. தொடரும் லியோ பட "நா ரெடி" பாடல் சர்ச்சை!