நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல இயக்குனர் இந்த சம்பவம் குறித்து ட்விட் செய்துள்ளார். 

மேலும் செய்திகள்: அழகில் மருமகள் சமந்தாவை மிஞ்சிய மாமியார் அமலா..! பிறந்தநாள் ஸ்பெஷல் ரேர் போட்டோஸ்!
 

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதிஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜோதிஸ்ரீ துர்கா உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அவரது வீட்டை சோதனையிட்ட செல்போனில் ஜோதிஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நான் உங்களை விட்டு செல்வதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். அம்மா I am going to miss you என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்: சூடுபிடிக்கும் போதைப்பொருள் விவகாரம்! நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு தொடர்பு! சிக்கிய வாரிசு நடிகை பகீர் தகவல்
 

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்திற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர், தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

இதை தொடர்ந்து பிரபல தேசிய விருது இயக்குனர், சேரன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,  "படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள். என நெகிழ்ச்சியான ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.