சென்னை  தியாகராய நகர் இல்லத்தில், சசிகலாவை சந்தித்தது ஏன் என்று பிரபல இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'கண்டா வரச்சொல்லுங்க' பாடகி கிடாக்குழி மாரியம்மாள் யார்? 50 வயதில் கிடைத்த முதல் வெற்றி..!
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை சசிகலா தான் தங்கியிருக்கும் தியாகராயநகர் வீட்டில், அம்மாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  இதைத்தொடர்ந்து தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் சசிகலாவை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சீமான், ஆகியோரை தொடர்ந்து தற்போது பிரபல இயக்குனர் பாரதிராஜாவும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். சற்று முன்னர் அவரை சந்தித்துவிட்டு வெளியே வந்த பாரதிராஜாவிடம், சசிகலாவை சந்தித்தது ஏன் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்: கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு... அடித்தது ஜாக்பாட்! இனி காமெடி சரவெடித்தான்..!
 

சாதனை தமிழச்சியை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசையில் சந்தித்தேன். ஒற்றை தமிழ் பெண்மணியாக சோதனைகளை தாங்கி நிற்கும் பெண்மணியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக சசிகலா வந்திருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்: புதிய காதலனுடன் ஸ்ருதிஹாசன்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
 

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவை அடுத்து அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளதாக ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் கருது தெரிவித்து வரும் நிலையில் பாரதிராஜாவின் இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.