இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அறிமுகங்கள் என்றாலே தமிழ்திரையுலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள். கார்த்திக், பாண்டியன், ராதா, ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா உள்ளிட்டோரை சொல்லலாம். அதேபோல் அவருடைய உதவி இயக்குநர்களும் நடிப்பு, இயக்கத்தில் வெளுத்து வாங்கியவர்கள் தான். மணிவண்ணன், பாக்யராஜ், மனோ பாலா, சித்ரா லட்சுமணன், பொன் வண்ணன், சீமான் ஆகியோரே அதற்கு சிறந்த உதாரணம் .

 

இதையும் படிங்க: ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்... முதல்வரிடம் இருந்து வந்த அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி....!

அப்படித்தான் பாபு என்கிற உதவி இயக்குநரையும் தன்னுடைய என் உயிர் தோழன் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகம் செய்தார். படமும் நன்றாக போனது. அடுத்து பாபு விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி என்ற படத்தில் நடித்தார், அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது தவறி விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டது. 

 

இதையும் படிங்க: “அண்ணாத்த” பட ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்குகிறது?... பரபரப்பில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்...!

இதையடுத்து திரைத்துறையில் இருந்து ஒதுங்கிய அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல திரைத்துறை பிரபலங்கள் உதவியின் மூலமாக சிகிச்சை பெற்று வந்த பாபுவை, இயக்குநர் பாரதிராஜா சந்தித்துள்ளார். ஆளே அடையாளம் தெரியாமல் உருகுலைந்து போய் கிடக்கும் பாபுவை சிறிது நேரம் உற்று பார்த்த படியே நின்றிருந்த பாரதிராஜா, ஒருகட்டத்தில் சோகம் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறுகிறார். தற்போது சிகிச்சைக்கு பணமின்றி கஷ்டப்படும் பாபுவிற்கு உதவி செய்யும் படி சோசியல் மீடியா மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.