பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் என முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ராஜா, ராணி என்ற படத்தை இயக்கினார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட், கோலிவுட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வர ஆரம்பித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 

வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அட்லீயின் படங்கள் ஆகா... ஓஹோ... என புகழப்பட்டாலும் அவர் பழைய படங்களின் கதைகளை அப்படியே லேட்டஸ்ட் டிரெண்டுக்கு மாற்றி புதுக்கதை போல் கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியான அன்றிலிருந்தே நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் அவர்களது வேலையை ஆரம்பித்து விடுகின்றனர். படத்தில் அந்த சீன், இந்த ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டது, இந்த சீன் அந்த படத்தோட  என்று மீம்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கினர். 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

சமீபத்தில் பிகில் படத்தை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் மரண கலாய் கலாய்த்தனர். இதையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லி, இந்தியில் படம் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் அட்லீ வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு ஒன்று சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது. 

மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ள அட்லீ, தனது ஏ ஃபார்  ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கான டைட்டிலை ரிலீஸ் செய்துள்ளார். அந்தகாரம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ்,  வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடிக்க உள்ளனர். 

இதையும் படிங்க: பிரபல டி.வி. தொகுப்பாளினி மீது வீடு புகுந்து தாக்குதல்... கொரோனா ஊரடங்கில் ஏற்பட்ட பரிதாபம்...!

விக்னராஜன் இயக்க உள்ள இந்த படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக 2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்திருந்தார். சுமார் 3 ஆண்டுகளாக படம் இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அட்லீ, தற்போது மீண்டும் பழைய ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.