விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். விஜய் டி.வி. ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார். என்ன தான் கலாய்த்தாலும், குழந்தை போல் சிரித்து கொண்டு அதை என்ஜாய் செய்வது தான் ஜாக்குலின் ஸ்பெஷல். சின்னத்திரையில் பிரபலமான ஜாக்குலின் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தார். தற்போது விஜய் டி.வி.யில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். 

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்த தடை உத்தரவால் உணவு கிடைக்காமல் கஷ்டப்படும் குரங்கு, தெரு நாய் போன்ற வாய் இல்லாத ஜீவன்களுக்கு தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

அப்படி தான், ஜாக்குலினும் தனது வீட்டிற்கு அருகேயுள்ள தெருநாய்களுக்கு வீட்டு வாசலில் உணவு அளித்துள்ளார். இதை பார்த்த ஜாக்குலின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் தகராறு செய்துள்ளார். இதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரிய ஜாக்குலின், வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால் அப்படியும் கோபம் தணியாத அந்த நபர் வீட்டிற்குள் புகுந்து ஜாக்குலினை தாக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவரது மதத்தை குறிப்பிட்டு கொச்சையாகவும் பேசினாராம். இந்த சம்பவத்தால் எப்போதும் சிரித்த முகத்துடன் சுற்றித்திரியும் ஜாக்குலின் மிகுந்த மனவேதனையில் இருக்கிறாராம்.